வேகமாக சாப்பிடுபவர்களின் உடல் எடை அதிகரிக்கும் அபாயம்

வேகமாக சாப்பிடுபவர்களின் உடல் எடை அதிகரிக்கும் அபாயம்

வேகமாக சாப்பிடுபவர்களின் உடல் எடை அதிகரிக்கும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2018 | 4:57 pm

COLOMBO (Newsfirst) – உணவு வகைகளை வேகமாக சாப்பிடுபவர்களுக்கு உடற்பருமன் அதிகர்க்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிலர் உணவு வகைகளை வேகமாக சாப்பிட்டு முடிப்பார்கள் அவ்வாறு சாப்பிடுவது உடல் நலத்திற்கு உகந்ததல்ல. இதனால் உடல் குண்டாகி விடும் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிபுணர்கள் 59,717 பேரிடம் இது பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

இவர்கள் 2 ஆம் ரக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இவர்களிடம் 6 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டது.

சாப்பிடும் முறை, மது உபயோகிக்கும் அளவு, தூங்கும் முறை, எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவு உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

அவற்றில் மெதுவாக சாப்பிடுபவர்களைவிட வேகமாக சாப்பிடுபவர்களின் உடல் பருமனாக இருப்பது தெரிய வந்ததுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்