Colombo (Newsfirst)
அமைச்சுக்களின் மறுசீரமைப்பு நாளை (25) இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர இன்று அங்குனுகொலபெலவில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,
நாளைய தினம் கட்டாயமாக அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறும். பல அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படும் என நினைக்கின்றேன். அந்த மாற்றம் நாட்டிற்குப் பயனுள்ள வகையில் அமைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். திறமையானவர்களுக்கு இடமளிக்க வேண்டும். நான் பதவி வகித்த அனைத்து அமைச்சுக்களையும் வெற்றிகரமாக நடத்திச் சென்றுள்ளேன் என கூற முடியும். நாளை என்ன நடக்கும் என்பது தொடர்பில் ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும்.