கண்டெடுக்கப்பட்ட பீரங்கி 17ஆம் நூற்றாண்டுக்குரியது

திருகோணமலை வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி 17 ஆம் நூற்றாண்டுக்குரியது

by Bella Dalima 24-02-2018 | 4:03 PM
Colombo (Newsfirst) திருகோணமலை வைத்தியசாலை வளாகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட பீரங்கி 17 ஆம் நூற்றாண்டுக்குரியது என தொல்பொருளியல் திணைக்களம் அனுமானித்துள்ளது. அது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசியர் P.B மண்டாவல தெரிவித்துள்ளார். இதேவேளை, திருகோணமலை வைத்தியசாலை வளாகத்தில் நேற்று (23) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் மற்றுமொரு பீரங்கியின் பாகமொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் பீரங்கியின் பாகமொன்று கடந்த 18 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே பீரங்கியின் பாகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியிலிருந்து 10 அடி ஆழத்தில் மற்றுமொரு பாகம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.