by Bella Dalima 24-02-2018 | 6:43 PM
கொடிவீரன் படத்திற்குப் பிறகு சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘அசுரவதம்’ விரைவில் வௌியாகவுள்ளது.
இப்படத்தை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ புகழ் எம். மருதுபாண்டியன் இயக்குகின்றார்.
இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார்.
எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இதனை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
தற்போது, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13 ஆம் திகதி வௌியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.