இலங்கையில் Ironman 70.3 சர்வதேசப் போட்டி

இலங்கையில் Ironman 70.3 சர்வதேசப் போட்டி நாளை ஆரம்பம்

by Bella Dalima 24-02-2018 | 8:33 PM
Colombo (Newsfirst) Ironman 70.3 சர்வதேசப் போட்டி நாளை (25) இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. Ironman 70.3 சர்வதேசப் போட்டியை தெற்காசியாவில் நடத்தும் முதல் நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. இந்தப் போட்டிக்கான ஊடக அனுசரணையை MTV/MBC மற்றும் நியூஸ்ஃபெஸ்ட் உள்ளிட்ட Champions Network வழங்கவுள்ளது. வௌிநாடுகளில் பிரசித்திபெற்ற Ironman 70.3 போட்டி மூன்று அம்சங்களைக் கொண்டதாகும். நீச்சல், சைக்கிளோட்டம், மரதன் ஆகிய மூன்று விளையாட்டுகள் இந்தப் போட்டியில் உள்ளடங்குகின்றன. Ironman 70.3 தேசிய போட்டி நாளை காலை 06 மணிக்கு காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது. 63 நாடுகளைச் சேர்ந்த 880 க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.