அவுஸ்ரேலிய பிரதி பிரதமர் இராஜினாமா செய்கிறார்

பதவியை இராஜினாமா செய்கிறார் அவுஸ்ரேலிய பிரதி பிரதமர் பார்னபி ஜோய்ஸ்

by Bella Dalima 23-02-2018 | 4:32 PM
அவுஸ்ரேலிய பிரதி பிரதமர் பார்னபி ஜோய்ஸ் (Barnaby Joyce) தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை (26) தமது இராஜினாமாக் கடிதத்தை கையளிக்கவுள்ளதாக அவர் இன்று அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.