பஸ்ஸில் கைக்குண்டு வெடிப்பு:ஐவரடங்கிய குழு விசாரணை

தியத்தலாவ பஸ்ஸில் கைக்குண்டு வெடிப்பு: விசாரணைகளுக்கு ஐவரடங்கிய குழு நியமனம்

by Bella Dalima 23-02-2018 | 5:15 PM
Colombo (Newsfirst) பண்டாரவளை - தியத்தலாவ பகுதியில் பஸ்ஸில் கைக்குண்டு வெடித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் தலைமையிலான ஐவரடங்கிய குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இராணுவத்தளபதி, குறித்த குழுவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். பஸ்ஸில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவரிடமிருந்த கைக்குண்டே வெடித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய் காயமடைந்த நிலையில், தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையிலிருந்து திரும்பியவுடன் அவரைக் கைது செய்து, வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.