''கம ஹதா கமு'' வேலைத்திட்டம் ஆரம்பம்

கிராமங்களில் போதைப்பொருளை இல்லாதொழிக்கும் ''கம ஹதா கமு'' வேலைத்திட்டம் ஆரம்பம்

by Bella Dalima 23-02-2018 | 5:33 PM
Colombo (Newsfirst) கிராமங்களில் போதைப்பொருளை இல்லாதொழிக்கும் ''கம ஹதா கமு'' வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படடது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய முன்னெடுக்கப்படும் ''போதைக்கு முற்றுப்புள்ளி'' எனும் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எம்பிலிப்பிட்டி மஹாவலி மைதானத்தில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.