உருளைக்கிழங்கிற்கு விசேட வர்த்தக வரி அதிகரிப்பு 

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி 29 ரூபாவால் அதிகரிப்பு

by Bella Dalima 23-02-2018 | 6:03 PM
Colombo (Newsfirst) இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி இன்று (23) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரையில் ஒரு ரூபாவாகக் காணப்பட்ட விசேட வர்த்தக வரி இன்று நள்ளிரவு முதல் 29 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் உருளைக்கிழங்கு அறுவடை நிறைவடைந்துள்ளதால் , உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிய வரித்திருத்தம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.