தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இந்திய மீனவர்களை விடுவிக்க கடற்றொழில் அமைச்சர் அனுமதி

தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இந்திய மீனவர்களை விடுவிக்க கடற்றொழில் அமைச்சர் அனுமதி

தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இந்திய மீனவர்களை விடுவிக்க கடற்றொழில் அமைச்சர் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2018 | 3:31 pm

Colombo (News1st)

நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அனுமதி வழங்கியுள்ளார்.

கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் கடந்த வருடத்தில் 129 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 109 பேர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீதமுள்ள 20 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 6 இலங்கை மீனவர்களை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது.

எனினும், இவர்களில் நால்வர் மீனவர்கள் இல்லையென தெரியவந்துள்ளது.

மீனவர்கள் என்ற போர்வையில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு சுட்டிக்காட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்