மீண்டும் உர மானியம் வழங்கத் தீர்மானம்: தேயிலை, ரப்பருக்கான கிளைபோசெட் தடையை நீக்குவது தொடர்பில் அவதானம்

மீண்டும் உர மானியம் வழங்கத் தீர்மானம்: தேயிலை, ரப்பருக்கான கிளைபோசெட் தடையை நீக்குவது தொடர்பில் அவதானம்

மீண்டும் உர மானியம் வழங்கத் தீர்மானம்: தேயிலை, ரப்பருக்கான கிளைபோசெட் தடையை நீக்குவது தொடர்பில் அவதானம்

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2018 | 8:04 pm

Colombo (Newsfirts) 

அடுத்த ஐந்து போகங்களுக்கான உர மானியத்தை மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

உர மானியம் தொடர்பில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிலவும் பிரச்சினையைக் குறைப்பது தொடர்பில் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (21) கூடிய தேசிய பொருளாதார சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நிதியுதவி வழங்கும் முறையை மாற்றி உர மானியம் வழங்கல் மற்றும் உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது தடை செய்யப்பட்டுள்ள கிளைபோசெட் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பிலான சட்ட விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டு, புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு நேற்று கூடிய தேசிய பொருளாதார சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்படி, தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களுக்கு கிளைபோசெட் பாவனையை அனுமதிப்பது தொடர்பில் ஆராய்ந்து புதிய கொள்கை வகுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்