விமல் மீது ரில்வின் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

விமல் வீரவன்ச மீது ரில்வின் சில்வா வழக்குத் தாக்கல்: விசாரணை ஒத்திவைப்பு

by Bella Dalima 22-02-2018 | 6:35 PM
தமது புலமைச் சொத்துரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து விமல் வீரவன்சவிடம் நட்ட ஈடு கோரி மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தாக்கல் செய்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மகிந்த சமயவர்தன இந்த வழக்கை மே மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் 50 மில்லியன் ரூபா இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரி ரில்வின் சில்வா இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். விமல் வீரவன்ச அவரது பெயரில் வௌியிட்ட நூல் ஒன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தும், அவர் மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்தபோது தாம் நிறைவேற்றுக்குழுவில் முன்வைத்த கருத்துக்கள் என ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கருத்துக்களை அவரது கருத்துக்களாகக் கூறி வௌியிட்டுள்ளதால், தமது புலமைச் சொத்து உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரரான ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.