நவாஸ் ஷெரீப்பிற்கு உயர் நீதிமன்றம் தடை

கட்சித் தலைவர் பதவியில் நீடிக்க நவாஸ் ஷெரீப்பிற்கு உயர் நீதிமன்றம் தடை

by Staff Writer 22-02-2018 | 9:54 AM
COLOMBO (Newsfirst) - பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தொடர்ந்தும் கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாது என அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப்பை நீக்குமாறு, பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவாஸ் ஷெரீப், ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டமையினால், அவரால் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க முடியாதென தெரிவித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் கட்சியின் தலைமைத்துவத்தை வகிப்பதற்கான அனுமதியை ஆளும் முஸ்லிம் லீக் கட்சி, கடந்த வருடம் நவாஸூக்கு வழங்கியிருந்தது. இதன் மூலம் ஷெரிப்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் கட்சித் தலைவராக அவர் தனது பதவியை மீண்டும் பெற அனுமதிக்கப்பட்டது. எவ்வாறாயினும் நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒருவர் கட்சியின் தலைமைத்துவத்தை வகிக்க முடியாதென தெரிவித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத்தாகும்.