தேங்காய் உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரிப்பு

உற்பத்தி குறைவடைந்ததே தேங்காய் விலை அதிகரிப்பிற்கு காரணம்

by Bella Dalima 22-02-2018 | 3:48 PM
Colombo (Newsfirst) தேங்காய் உற்பத்தி குறைவடைந்ததன் காரணமாகவே தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் தேங்காய் உற்பத்தியில் சுமார் 400 மில்லியன் தேங்காய்கள் அளவில் வீழ்ச்சி காணப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ஜே. எச். ரஞ்சித் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் போதிய மழை வீழ்ச்சி கிடைக்காததன் காரணமாகவே தேங்காய் உற்பத்தி குறைவடைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மே மாதமளவில் போதியளவு தேங்காய்களை உற்பத்தி செய்ய முடியும் எனவும் தேங்காயின் விலை குறைவடையக்கூடிய சாத்தியமிருப்பதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை, அண்மையில் அரசு தேங்காய்க்கான நிர்ணய விலை 75 ரூபாவென அறிவித்தது. ஆயினும், சில வர்த்தகர்கள் நிர்ணய விலையை பொருட்படுத்தாமல் அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்து வருவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.