வட்டுவாகல் மக்கள் வீதி மறியல் போராட்டம்

வட்டுவாகல் மக்கள் வீதி மறியல் போராட்டம்

வட்டுவாகல் மக்கள் வீதி மறியல் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2018 | 1:35 pm

COLOMBO (Newsfirst) – முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள மக்கள் காணியை அளவிடுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமது எதிர்ப்பை வௌிப்படுத்தும் வகையில் வீதிமறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

காணியை அளவீடு செய்வதற்கு சென்றுள்ள நில அளவீட்டு அதிகாரிகளை முகாமிற்குள் செல்ல விடாது தடுத்த போதிலும், அவர்கள் உள்ளே சென்று அளவீடுகளை மேற்கொண்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமது பூர்வீக காணியை விடுவிக்கும் வரை தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வட்டுவாகள் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்