English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
22 Feb, 2018 | 5:54 pm
நடிகர் வடிவேலு மீது தயாரிப்பாளர்களான ஆர்.கே-யும் ஸ்டீபனும் புகார் செய்துள்ளனர்.
இயக்குனர் ஷங்கர் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் தயாரிக்கத் திட்டமிட்டார்.
இதில் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தனர். சிம்பு தேவன் இயக்குவதாக இருந்தது. இதற்காக சென்னையில் பல கோடி ரூபா செலவில் அரங்கு அமைத்திருந்தனர்.
ஆனால், படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வடிவேலு நடிக்க மறுத்துவிட்டார்.
இதனால் படம் நின்று போனது. வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து நடிகர் சங்கம் மூலம் வடிவேலுவிடம் விளக்கம் பெறப்பட்டது.
இந்த நிலையில், வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் ஆர்.கே. மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் புகார் அளித்துள்ளனர்.
ஆர்.கே. ‘எல்லாம் அவன் செயல்’, ‘அழகர் மலை’, ‘புலிவேஷம்’, ‘என் வழி தனி வழி’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.
இவர் புதிதாக ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்தைத் தயாரிக்கவிருந்தார்.
இந்தப் படத்தில் நகைச்சுவைக் கதாப்பாத்திரத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்திருந்தார்.
இதற்காக அவருக்கு 75 இலட்சம் ரூபா சம்பளம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்புக்கு வடிவேலு வரவில்லை என்று ஆர்.கே. புகார் கூறியுள்ளார்.
இதுபோல், ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்திருந்தனர். தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா இயக்குவதாகவும், ஸ்டீபன் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் படத்தின் கதையை வடிவேலு மாற்ற சொன்னதால் படப்பிடிப்பு நின்று போனதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த 2 புகார்கள் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரித்து வருகிறது.
28 May, 2020 | 02:44 PM
17 Apr, 2018 | 04:13 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS