புதிதாக 4000 பாலங்களை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டம்

புதிதாக 4000 பாலங்களை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டம்

புதிதாக 4000 பாலங்களை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2018 | 4:08 pm

Colombo (Newsfirst)

மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக 4000 பாலங்களை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான நிதியுதவி ஐக்கிய இராச்சியத்தின் நேரடி கடனுதவியின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதனடிப்படையில், 50 மில்லியன் பிரித்தானிய பவுன் மதிப்பீட்டு செலவில் கிராமிய பாலம் அமைக்கும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் நிர்மாணிப்பு நிறுவனங்களிடத்தில் இருந்து கேள்வி மனுக்களைக் கோருவதற்கான அதிகாரம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு வழங்கப்படவுள்ளது.

கிடைக்கவுள்ள ஆலோசனைகள் மற்றும் விலை மனுக்களை மதிப்பீடு செய்து சிபாரிசுகளை முன்வைப்பதற்காக உரிய தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழு மற்றும் கொள்முதல் குழுவிற்கு அதிகாரத்தினை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்