பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானம்

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானம்

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2018 | 9:08 pm

Colombo (Newsfirst)

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன, தமது பதவிக்காலத்தை சுய விருப்பின் பேரில் முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளார்.

அவர் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் பதவிக் காலத்தை நிறைவு செய்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவிலுள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலான அமைச்சின் ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இன்று மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இன்று பகல் 12.33 அளவில் லண்டனிலிருந்து வருகை தந்த விமானத்தில் அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்