ஜனாதிபதி இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்

ஜனாதிபதி இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்

ஜனாதிபதி இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2018 | 1:01 pm

COLOMBO (Newsfirst) – காலஞ்சென்ற பேராசியர் விஷ்வ வர்ணபாலவிற்கு இதன்போது ஜனாதிபதி அனுதாப உரையை நிகழ்த்தினார்.

பேராசியர் விஷ்வ வர்ணபாலவிற்கான அனுதாப உரைக்கான பிரேரணையை சபாநாயகர் கரு ஜயசூரிய சபைக்கு சமர்பித்தார்.

குறித்த அனுதாப பிரேரணையை வழிமொழிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பேராசிரியர் விஷ்வ வர்ணபாலவின் அலப்பரிய சேவைகள் குறித்து உரையாற்றினார்.

அனுதாப பிரேரணையை சபையில் சமர்பிப்பதற்கு முன்னர் சபையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

தேசிய அரசாங்கத்திற்கான ஒப்பந்தத்தை சபையில் சமர்பிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் அதிகாரத்தில் உள்ளதாக பிரதமர் ரணில் விக்மரசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தமையை சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்