சிறுவனைத் தாக்கியதாக ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

சிறுவனைத் தாக்கியதாக ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

சிறுவனைத் தாக்கியதாக ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2018 | 4:32 pm

Colombo (Newsfirst)

சிலாபத்தில் சிறுவன் ஒருவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயது சிறுவனே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த சிறுவன் வேறு இருவருடன் மூங்கில் வெட்டச் சென்றிருந்த போது, சந்தேகநபரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை இன்று சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்