EAP குழும நிறுவனத்தை விற்பனை செய்யத் திட்டம்

EAP குழும நிறுவனத்தை 60 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்வதற்கு திட்டம்

by Staff Writer 21-02-2018 | 6:15 AM
COLOMBO (Newsfirst) - EAP குழும நிறுவனத்தை பிரித்தானிய நிறுவனமொன்றிற்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கைகள் நேற்று (20) வெளியாகியுள்ளன. வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்யும் மத்திய வங்கியில் உள்ளடங்கும் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் நியூஸ் பெஸ்ட் இது தொடர்பில் வினவியது. இந்த விடயம் தொடர்பில் EAP குழுமத்தின் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்த டபிள்யூ. ரணவீர, மத்திய வங்கியிடம் இதற்கான அனுமதியைப் பெறுவது அவசியமானது எனவும் தெரிவித்தார். Daily FT பத்திரிகையில் வௌியான செய்தியின் பிரகாரம் இந்த பேச்சுவார்த்தையில் மேலும் சில நிறுவனங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Straits Grid Ltd மற்றும் இடைத்தரகரான மலேஷிய வர்த்தகரான சுதிர் ஜெயராம் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். பிரித்தானிய லைக்கா குழுமத்தின் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழில்வாண்மையாளரான அலிராஜா சுபாஸ்கரன் கொள்வனவாளர் என நம்பப்படுகின்றது. இடைத்தரகரான சுதிர் ஜயராம் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வௌிநாட்டு பணத்தை எடுத்துச் செல்ல முற்பட்டிருந்தார். ஹோட்டன் ஸ்க்வெயார் என்ற 250 மில்லியன் அமெரிக்க டொலர்களுடைய செயற்றிட்டத்தில் குறித்த நபருக்கு தொடர்பு காணப்படுகின்றது. கொள்வனவாளராக அலிராஜா சுபாகரனின் நிறுவனமான லைக்காமொபைல் பிரான்ஸில் இலாபம் ஈட்டுகையில் மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. லைக்காமொபைல் வரி ஏய்ப்பு தொடர்பில் பிரித்தானியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. மத்திய வங்கியின் ஆளுனர், அரசாங்கம் மற்றும் ஊடக அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆ​ணைக்குழுவிற்கு இந்த விடயம் தொடர்பில் நியூஸ் பெஸ்ட் கவனத்திற்கு கொண்டு வருகின்றது.