25% பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல்

20 உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல்

by Staff Writer 21-02-2018 | 6:53 AM
COLOMBO (Newsfirst) - 20 உள்ளூராட்சி மன்றங்களில் ஏறக்குறைய 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல் நிலவுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்க முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களில் நியமிக்கப்படவிருந்த 8356 உறுப்பினர்களின் எண்ணிக்கை 325 ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. குறித்த உறுப்பினர்களுக்கான பதவி தீர்மானிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகளின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரம் கட்சிகளின் செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.