"மக்கள் நீதி மய்யம்" என்ற பெயரில் தனது கட்சியை நடிகர் கமல் ஹாசன் அங்குரார்ப்பணம் செய்துள்ளார்.
இணைந்த கரங்களுடன் கூடிய வெண்ணிறக் கொடியைக் கட்சிக்கொடியாக நடிகர் கமல் ஹாசன் வௌிப்படுத்தியுள்ளார்.
மதுரை - ஒத்தக்கடையில் இடம்பெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சிக்கொடியை ஏற்றி, கட்சியின் பெயரையும் முதன்முறையாக அவர் அறிவித்துள்ளார்.
இன்று காலை இராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி, காலஞ்சென்ற அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து கமல் ஹாசன் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான ஊடக சந்திப்பின் போது, கமல் ஹாசன் ராமேஷ்வர மீனவர் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, இராமேஸ்வர மீனவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதனையடுத்து.
இதுவரை நான் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது இல்லங்களில் வாழ ஆசைப்படுகின்றேன். நான் இறுதி ஊர்வலங்களில் கலந்துகொள்வதில்லை. இன்று தாய் மொழி நாள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வர வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும்.
என கருத்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசனின் அரசியல் பயணத்திற்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், சிலர் நேரெதிர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வினைத்திறனற்ற செயற்பாடுகளே தாம் அரசியலில் பிரவேசிக்கக் காரணம் என நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே தாம் அக்கட்சியை சேர்ந்த எவரையும் சந்திக்கவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல் ஹாசன் கடந்த நவம்பர் மாதத்தில் தமது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.