விஜயின் 62 ஆவது படக்குழுவிற்கு தடை

விஜயின் 62 ஆவது படக்குழுவிற்கு தடை

விஜயின் 62 ஆவது படக்குழுவிற்கு தடை

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2018 | 11:30 am

COLOMBO (Newsfirst) – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் விஜய்யின் 62 ஆவது படத்தின் சண்டைக்காட்சிகள் வெளியாகி படக்குழுவிற்கு அதிர்ச்சியளித்த நிலையில், படக்குழுவினருக்கு புதிய தடை ஒன்று போடப்பட்டுள்ளது.

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விஜயின் 62 ஆவது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

விஜய் 62 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, பின்னர் கொல்கத்தாவிலும் நடத்தப்பட்டது. அங்கு படமாக்கப்பட்ட நிலையில், ரவுடிகளை விஜய் அடிக்கும் படியான படத்தின் சண்டைக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு, இதுபோன்று மீண்டும் நிகழாமல் தடுக்க புதிய தடை ஒன்றை பிறப்பித்துள்ளதாம்.

அதன்படி படப்பிடிப்பு நிகழும் இடத்திற்குள் படக்குழுவினர் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்று ஏ.ஆர்.முருகதாஸ் அறிவுறுத்தியாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது காஞ்சிபுரம் அருகில் படப்பிடிப்பு நடத்தப்படும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு அமெரிக்க செல்லவிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்