ரோபோ பெண்ணின் மனம் கவர்ந்த நாயகன் யார் தெரியுமா?

ரோபோ பெண்ணின் மனம் கவர்ந்த நாயகன் யார் தெரியுமா?

ரோபோ பெண்ணின் மனம் கவர்ந்த நாயகன் யார் தெரியுமா?

எழுத்தாளர் Bella Dalima

21 Feb, 2018 | 5:43 pm

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் உலக தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் சோஃபியா ரோபோ கலந்து கொண்டது.

உலகின் முதன்முறையாக சவுதி அரேபிய நாட்டின் குடியுரிமையைப் பெற்ற இந்த ரோபோ, இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக சென்றுள்ளது.

இந்நிலையில், சோஃபியாவுடனான கலந்துரையாடலின் போது, மனம் கவர்ந்த ஹீரோ யார் என கேள்வி கேட்கப்பட்டது.

”ஷாருக் கான் தான் எனக்குப் பிடித்த ஹீரோ” என சோஃபியா உடனடியாக பதிலளித்துள்ளது.

”உங்களைக் கவலையடையச் செய்வது எது?’’ என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

நான் மனிதர்களைப் போல கவலையடைவதில்லை. எதிர்காலத்தில் மனிதர்களைப் போல உணர்வுகள் எங்களுக்கும் ஏற்படுத்தப்படும். அப்பொழுது என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவேன்

என்று தெரிவித்தது.

ஹாங்காங்கின் ஹான்சன் என்பவரால் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சோஃபியா ரோபோவிற்கு ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்