ஹல்மில்லேவ மக்களுக்கு சனசமூக நிலையம் கையளிப்பு

மக்கள் சக்தி: ஹல்மில்லேவ மக்களுக்கு சனசமூக நிலையம் கையளிப்பு

by Staff Writer 21-02-2018 | 2:12 PM
COLOMBO (Newsfirst) - மஹிந்தலை, ஹல்மில்லேவ கிராம வாழ் மக்களுக்கான சனசமூக நிலையம் இன்று மக்கள் சக்தி 1000 திட்டத்தின் கீழ் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்தக் கிராமத்தில் 700 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் தாய், சேய் மாதாந்த சிகிச்சை கிராமத்தில் உள்ள விகாரையிலே முன்னெடுக்கப்பட்டு வந்தது. விகாரையில் சமய நிகழ்வுகள் இடம்பெறும் போது இதனை முன்னெடுப்பதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். போயா தினங்களில் இங்குள்ள மரத்தின் கீழேயே ஒன்றுகூடல்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் ஹல்மில்லேவ உள்ளிட்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நன்மையடையவுள்ளனர். வர்த்தகரான எரல் வீரசிங்க மற்றும் அவரது பாரியாரின் அனுசரணையுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://www.youtube.com/watch?v=6xZFff74Nwo