திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மீது பாலையூற்றில் தாக்குதல்

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மீது பாலையூற்றில் தாக்குதல்

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மீது பாலையூற்றில் தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

21 Feb, 2018 | 9:47 pm

Colombo (Newsfirst)

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மீது பாலையூற்று பகுதியில் வைத்து சில தரப்பினர் தாக்குதல் நடத்தி, ரயிலுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

இந்த தாக்குதலின் போது ரயில் எஞ்சினுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இரண்டரை மணித்தியால தாமதத்துடன் ரயில், கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடைந்ததாக கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயணத்தில் ஈடுபடும் ரயில்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேகநபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்