சிரியாவில் ஒரு மாத கால போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

சிரியாவில் ஒரு மாத கால போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

சிரியாவில் ஒரு மாத கால போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2018 | 10:29 am

COLOMBO (Newsfirst) – சிரியாவில் ஒரு மாத கால போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சிரிய அரச படைகள் மற்றும் கூட்டுப் படைகள் இணைந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த 2 நாட்களாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன.

சிரியாவின் கோட்டா பகுதியில் வான்வழி, ரொக்கட், மற்றும் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 48 மணித்தியாலங்களில் 50 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடங்கலாக 250 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

சிரியாவில் உள்ள கிழக்கு கோட்டாவில் பொதுமக்களை குறிவைத்து தீவிரப்படுத்தியுள்ள அரசின் தாக்குதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

சிரியா இராணுவத்திடமிருந்து எவ்வித கருத்தும் வராத நிலையில், கிளர்ச்சியாளர்ளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அரசு கூறி வரும் நிலையில் சிரியாவில் ஒரு மாத கால போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்