இலங்கையில் பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரிப்பு

இலங்கையில் பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரிப்பு

இலங்கையில் பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2018 | 6:59 am

COLOMBO (Newsfirst) – இலங்கையில் பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் பியருக்கான வரியைக் குறைத்ததன் பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மதுவரித்திணைக்களம் கடந்த மாதங்களில் வௌியிட்ட தரவுகளின் மூலம் இந்த விடயம் தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் மொத்த மதுபாவனையில் 18 வீதம் பியர் நுகர்வு காணப்படுவதாகவும் அந்த தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் நுகர்வு வீதத்தில் அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பியர் நுகர்வு அதிகரித்தமை தொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்