இந்தியாவில் ஊழியரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இலங்கை அதிகாரி கைது

இந்தியாவில் ஊழியரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இலங்கை அதிகாரி கைது

இந்தியாவில் ஊழியரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இலங்கை அதிகாரி கைது

எழுத்தாளர் Bella Dalima

21 Feb, 2018 | 7:28 pm

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் ஊழியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இலங்கை அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாகப்பட்டினம் – அச்சுதபுரம் விசேட பொருளாதார வலயத்தில் பொது முகாமையாளராகக் கடமையாற்றும் இலங்கையர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மல்லாகபுரத்தில் உள்ள தமது வீட்டில் வைத்து குறித்த அதிகாரி தனது ஊழியரான பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை தொடர்பில் குற்றம் சுமத்தி அவரை பணி நீக்கம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தமது நிலை தொடர்பில் மேலதிகாரிகளிடம் முறையிட்டதையடுத்து, அவர்களாலும் குறித்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மேலும் இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்