அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Feb, 2018 | 4:19 pm

இந்த வாரம் அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சரவை மறுசீரமைப்பிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

அரசாங்கம் மாற்றப்படும் என்ற கருத்து நிலவி வந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் மாத்திரம் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்