25%பெண்களின் பிரதிநிதித்துவம் நடைமுறைக்கு வருகிறது

உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டத்தை  நடைமுறைப்படுத்தத் தீர்மானம்

by Bella Dalima 20-02-2018 | 8:05 PM
Colombo (Newsfirst) உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பிலான சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (19) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில், சில உள்ளூராட்சி மன்றங்களில் சிக்கல் நிலவுவதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, நேற்று இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்கு இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், சில உள்ளூராட்சி மன்றங்களில் பிரச்சினை ஏற்படுமாக இருந்தால், அதன்போது நீதிமன்றத்தை நாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக உள்ளூராட்சி மன்றங்கள் மாகாண சபை அமைச்சு தெரிவித்தது.

ஏனைய செய்திகள்