துரித பொருளாதார முகாமைத்துவ மாற்றங்கள் அடங்கிய புதிய திட்டம் முன்வைக்கப்படவுள்ளது
by Bella Dalima 20-02-2018 | 5:23 PM
Colombo (Newsfirst)
நாட்டிற்குத் தேவையான துரித பொருளாதார முகாமைத்துவ மாற்றங்கள் அடங்கிய புதிய திட்டமொன்று ஜனாதிபதி தலைமை தாங்கும் தேசிய பொருளாதார சபையினூடாக அடுத்த வாரத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
தேசிய பொருளாதார சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கூடிய போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார முகாமைத்துவத்தின் போது நாட்டிற்குத் தேவையான துரித மாற்றங்கள் மற்றும் அதன்போது எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் குறுகிய கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் முகமாக தேவையான தீர்மானங்களை எடுப்பதற்காக தேசிய பொருளாதார சபை கடந்த வருடத்தில் ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்டது.