செயற்கை மழையை ஏற்படுத்த நிபுணர்குழு வருகை

செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக விசேட நிபுணர்குழு நாட்டிற்கு வருகை

by Staff Writer 20-02-2018 | 11:49 AM
COLOMBO (Newsfirst) - செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து தொழிநுட்ப நிபுணர்குழு இன்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக மின்சக்தி மீள்புதுப்பிக்த் தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த குழுவினர் இன்றும் நாளையும், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 59 வீதம் வரை குறைவடைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுவதாக மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.