by Staff Writer 20-02-2018 | 8:20 AM
COLOMBO (Newsfirst) - பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த லத்வியா நாட்டின் மத்திய வங்கி ஆளுனர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுனர் நிதி மோசடியில் ஈடுபடுவதற்கு முயன்றதாக அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுமார் 124,100 டொலரை மோசடி செய்வதற்கு ரிம்செவிக்ஸ் முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரின் இல்லம் மற்றும் அலுவலகங்களை சோதனையிட்ட பொலிஸார் கடந்த சனிக்கிழமை மத்திய வங்கி ஆளுனரை கைது செய்தனர்.
எனினும் விசாரணைகளின் பின்னர், மத்திய வங்கி ஆளுனர் ரிம்செவிக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய வங்கி ஆளுனரின் கைதை அடுத்து, அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த அந்நாட்டு பிரதமர், பதவியிலிருந்து விலகுமாறு ஆளுனருக்கு தெரிவித்துள்ளதாக தகவலகள் வௌியாகியுள்ளன.