யாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

20 Feb, 2018 | 4:43 pm

யாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளது.

அங்கு பெரும்பாலான மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தைகளுக்கு அதிகளவான மரக்கறிகள் வருவதாலும் தேவைக்கு அதிகமாக அவை கிடைப்பதாலுமே விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமையால், அதிகளவு மரக்கறிகளைக் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யக்கூடியதாக உள்ளதாக நுகர்வோர்
தெரிவித்தனர்.

இதேவேளை, நுவரெலியாவில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்