மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னோக்கி

மக்களின் துயர் போக்கும் மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னோக்கி

by Staff Writer 19-02-2018 | 10:19 PM
COLOMBO (Newsfirst) - கடந்த காலத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய மனிதாபிமான நடவடிக்கையாக மக்கள் சக்தி திட்டமும் பதிவானது. உள்நாட்டு ,வௌிநாட்டு நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ள மக்கள் சக்தி மேலும் தமது திடடத்தை விஸ்தரித்து வருகின்றது. குரல் அற்ற மக்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் ஊடாக மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளை நாம் அடையாளம் கண்டோம். பேராதனைப் பல்கலைக்கழத்துடன் இணைந்து நியூஸ்பெஸ்ட் குழுவினர் இல்லங்கள் தோறும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டோம். அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருந்த சந்தர்ப்பத்தில் நாம் மக்களுக்காக இந்தத் திட்டங்களை முன்னெடுத்தோம். இல்லங்கள் தோறும் சென்று திரட்டிய தகவல்களை அடிப்படையாக வைத்து இரண்டு அறிக்கைகளை தயாரித்தோம். அதன் மூலம் அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையை நன்கு புரிந்து கொண்டோம். இந் நாட்டு மக்களின் குரலை இலங்கையில் மாத்திரம் அன்றி சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முதலாவது உலக மனிதநேய மாநாட்டில் மக்கள் சக்தி இறுதி அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. தமது சம்பளத்தில் அல்லது ஓய்வூதியத்தில் ஒரு சிறு தொகை அல்லது மில்லியன் கணக்கில் மக்கள் சக்தி கணக்கில் வைப்புச் செய்த வர்த்தகர்கள் , வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் எம்மை மேலும் பலப்படுத்தினர். கடந்த இரண்டு வருடங்களில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் பல திட்டங்களை நாம் வெற்றிகரமான நிறைவு செய்துள்ளோம் அநுராதபுரம் பதவிய பகுதியில் புத்தாங்கல மற்றும் 40 ஆம் கொலனி ஆகிய பகுதிகளில் 1300 இற்கும் அதிகமான குடும்பகள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியிருந்தனர். மக்கள் சக்தி திட்டத்தின் ஊடாக தற்போது அந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படடுள்ளது. பலாங்கொடை மெத்தகந்த பீலகும்புர கிராமத்திற்கு செல்லும் வீதி 20 வருடங்களாக செப்பனிடப்படாமல் இருந்தது. மக்கள் சக்தி திட்டத்தின் ஊடாக இன்று அந்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கங்காதரன் குடியிருப்பிற்கான வீதி சுமார் 20 வருடங்களாக புனரமைக்கப்படாமல் காணப்பட்டது . மக்கள் சக்தி திட்டத்தின் ஊடாக அந்த பிரதேச மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கிட்டியது. சுத்தமான குடிநீர் இன்றி சிரமப்பட்ட கிளிநொச்சி பரந்தன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தினூடாக முறையான குடிநீர்த் திட்டம் வழங்கப்பட்டது. கடற்றொழிலுக்கு செல்லும் களுவங்கேணி மீனவர்கள், கலங்கரை விளக்கம் இன்மையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். மீனவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், களுவங்கேணி பகுதியில் கலங்கரை விளக்கமொன்றை நிர்மாணிப்பதற்கு மக்கள் சக்தி திட்டம் நடவடிக்கை எடுத்திருந்தது. மக்களுடன் இணைந்து இதனைவிடவும் உறுதியாக அப்பாவி மக்களுக்காக மக்கள் சக்தி திட்டம் முன்னெடுக்கப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். https://www.youtube.com/watch?v=mkKAb_W1o6g