அரசியல் நிலைமை தொடர்பில் 3 மணித்தியால விவாதம்

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் 3 மணித்தியால விவாதம்

by Staff Writer 19-02-2018 | 7:30 PM
COLOMBO (Newsfirst) - நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று 3 மணித்தியால விவாதம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ஆரம்பமான விவாதம் இரவு 7 மணி வரை நடைபெற்றது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் விவாதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்று காலை சபாநாயகரிடம் கோரியிருந்தனர். கட்சி தலைவர்களின் கூட்டத்தின் பின்னரே அது குறித்து தீர்மானிக்க வேண்டும் என்பதால் இன்று காலை பாராளுமன்றம் கூடிய போது 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்பட்ட கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மையானதா என இன்று காலை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கேள்வி எழுப்பயிருந்ததுடன், இன்று மாலை விவாத்தின் போது அதற்கு திலங்க சுமதிபால பதிலளித்தார்.