மெக்சிகோ ஹெலிகொப்டர் விபத்து: உயிரழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மெக்சிகோ ஹெலிகொப்டர் விபத்து: உயிரழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மெக்சிகோ ஹெலிகொப்டர் விபத்து: உயிரழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2018 | 4:35 pm

COLOMBO (Newsfirst) – மெக்சிகோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற ஹெலிகொப்டர் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.

7.2 ஆக பதிவான குறிப்பிட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக

குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மற்றும் ஆளுனர் ஆகியோர் பயணித்த ஹெலிகொப்டர் தரையிறங்கும்போது நிலை தடுமாறி கீழே வீழ்ந்தது.

குறித்த விபத்தில் இருவரும் காயமடைந்ததோடு மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 16 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்