சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் நாளை

சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் நாளை ஆரம்பம்

by Staff Writer 19-02-2018 | 3:59 PM
COLOMBO (Newsfirst) - கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் நாளை ஆரம்பாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளை முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை செயன்முறை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக உதவி பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் தெரிவித்துள்ளார். 174,507 பரீட்சார்த்திகள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றவுள்ளதுடன், பழைய பாடத்திட்டன் கீழ் 5093 ​பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.