என் வழி வேறு, கமலின் வழி வேறு – ரஜினி

என் வழி வேறு, கமலின் வழி வேறு – ரஜினி

என் வழி வேறு, கமலின் வழி வேறு – ரஜினி

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2018 | 4:55 pm

COLOMBO (Newsfirst) – என்னுடைய பாணி வேறு, கமல் பாணி வேறு என்று நடிகர் ரஜினி, கமலின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

நடிகர் கமல் எதிர்வரும் 21 ஆம் திகதி இராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

அதன்பின் மதுரை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார், இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக ரஜினியை, அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார் கமல்.

கமல் அழைப்பு குறித்து ரஜினி கூறும்போது, ‘என்னுடைய நண்பர் கமல் அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நண்பர் கமல், பணம், புகழ், பெயர் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எண்ணத்தில் வந்திருக்கிறார்.

ஆண்டவனின் ஆசிர்வாதம் அவருக்கு கிடைக்க வேண்டும். எல்லா பயணத்திலும் கமல் வெற்றியடைய வேண்டும். சினிமாவில் அவருடைய பாணி வேறு, என்னுடைய பாணி வேறு. அதுபோல் அரசியலிலும் அவருடைய பாணி வேறு. என்னுடைய பாணி வேறு. ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் இருவரின் குறிக்கோள்’ என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்