இரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை

இரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை

இரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2018 | 8:27 pm

COLOMBO (Newsfirst) – தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற 3 மணித்தியால விவாதத்தின் போதி எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

”அவதானமாக செயற்படாவிடின் இந்த சிறிய தேர்தலின் பின்னர் ஈழம் மீண்டும் மலரும்” என மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் செயற்பாடுகளின் போது தெரிவித்திருந்தமைக்கு பதலளிக்கும் வகையில் சம்பந்தன் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தெரிவித்தது பாரிய பொய் எனவும் இவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுக்கபடும் என்றால் ஈழம் மீண்டும் மலரும், அதற்கு காரணமாக நாம் இருக்க மாட்டோம் என்றும், அதற்கு காரணமாக மொட்டே (பொதுஜன பெரமுன) இருக்கும் என்றும் பாராளுமன்றில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவத்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்