இலங்கை காப்புறுதி துறையில் வளர்ச்சி

இலங்கை காப்புறுதி துறையில் வளர்ச்சி

by Staff Writer 18-02-2018 | 4:53 PM
இலங்கை காப்புறுதி துறையில் கடந்த வருட மூன்றாவது காலாண்டு பகுதியில் 15.53 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 15,862 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும். 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இறுதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் நீண்டகால காப்புறுதி, பொதுவான காப்புறுதி நடவடிக்கைகள் மூலம் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 16 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 1 இலட்சத்து 2ஆயிரத்து 155 ரூபா பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.