by Staff Writer 18-02-2018 | 5:08 PM
COLOMBO (Newsfirst) - அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தமது 70 ஆவது வயதில் இன்று காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் அவர் காலமானதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.
திருக்கோணேஸ்வரம் திருப்பணி சபையின் தலைவர், இந்து வித்தியா அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ஆகிய பதவிகளையும் அவர் வகித்து வந்தார்.
https://www.youtube.com/watch?v=cdN_7zw_LVs