ரொஜர் பெடரர் Rotterdam பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவு

ரொஜர் பெடரர் Rotterdam பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவு

ரொஜர் பெடரர் Rotterdam பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவு

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2018 | 4:28 pm

டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் Rotterdam பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவானார்.

ரொடோர்டோம் பகிரங்க டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடைபெறுகிறது.

தொடரின் அரையிறுதிப்போட்டியில் ரொஜர் பெடரர் இத்தாலியின் அன்ட்ரியாஸ் செபியை எதிர்த்தாடினார்.

போட்டியின் முதல் செட்டை 06 க்கு 03 என ரொஜர் பெடரர் கைப்பற்றினார்.

இரண்டாம் செட் விறுவிறுப்பாக நடைபெற்றது.

அந்த செட்டில் ரொஜர் பெடரர் ஆதிக்கத்துடன் விளையாடி 7 புள்ளிகளை சுவீகரித்தார்.

இரண்டாம் செட்டில் அன்ட்ரியாஸ் செபி பெடரரரின் ஆதிக்கத்துக்கு இணையாக விளையாடினாலும் அவரால் 6 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது.

இரண்டாம் செட்டையும் 7 க்கு 06 என கைப்பற்றிய ரொஜர் பெடரர், Rotterdam பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்.

இறுதிப்போட்டியில் அவர் பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவை சந்திக்கவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்