ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகிறது

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகிறது

by Bella Dalima 17-02-2018 | 6:21 PM
நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் தயாராகிறது. பெங்களூரைச் சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தைத் தயாரிக்கின்றனர். ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனி கபூரிடமும் இதற்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐந்து பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் படம் தயாராகின்றமை விசேடமாகும். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உட்பட அனைத்து மொழி நடிகர்- நடிகைகளும் ஸ்ரீதேவி பற்றி பாராட்டிப் பேசும் கருத்துக்களும் படத்தில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீதேவியின் படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் ஆகியோரது பேட்டியும் படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை, சாதனைகள், விருதுகள், குடும்பம் உள்ளிட்ட விடயங்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி தனது 4 வயதிலேயே எம்.ஏ. திருமுகம் இயக்கிய துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் கதாநாயகியானார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்துள்ளார். பின்னர் இந்திப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.