மெக்சிகோவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மெக்சிகோவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மெக்சிகோவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2018 | 3:42 pm

மெக்சிகோவில் இன்று 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோ சிட்டிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

பசுபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒயாசாகா நகருக்கு வடகிழக்கு திசையில் சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் சுமார் 24 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக மெக்சிகோ சிட்டி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

குவாத்தமாலா நாட்டின் தெற்கு பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கதினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் இல்லை.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 369 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்