நெல் விளைச்சலைக் கொள்வனவு செய்யத் தயார்: நெற்சந்தைப்படுத்தும் சபை அறிவிப்பு

நெல் விளைச்சலைக் கொள்வனவு செய்யத் தயார்: நெற்சந்தைப்படுத்தும் சபை அறிவிப்பு

நெல் விளைச்சலைக் கொள்வனவு செய்யத் தயார்: நெற்சந்தைப்படுத்தும் சபை அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2018 | 5:46 pm

Colombo (Newsfirst)

நெல் விளைச்சலைக் கொள்வனவு செய்யத் தயாராகவுள்ளதாக நெற்சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளது.

நெல் விளைச்சல் தொகுதிகளைக் கொள்வனவு செய்வதில் நெற்சந்தைப்படுத்தல் சபைக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென சபையின் தலைவர் எம்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

பெற்றுக்கொள்ளப்படும் நெல் தொகுதிகளைக் களஞ்சியப்படுத்தத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபை தெரிவித்தது.

அத்துடன், நெல்லை கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி உரிய மாவட்ட செயலாளர்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பி. திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்