கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2018 | 3:31 pm

Colombo (Newsfirst)

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நேற்று (16) இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பகுதியில் அண்மைக்காலமாக பல திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

தங்காபரணத் திருட்டு மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுக்களில் ஈடுபட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸார் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருந்தனர்.

அதற்கமைய, திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது நகைகள் திருட்டு, திருடியவற்றை பாதுகாத்து வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்