உர மானியம் கிடைப்பதில்லை என நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கவலை

உர மானியம் கிடைப்பதில்லை என நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கவலை

உர மானியம் கிடைப்பதில்லை என நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கவலை

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2018 | 6:55 pm

 

Colombo (Newsfirst)

அரசாங்கத்தினால் தமக்கு உர மானியம் வழங்கப்படுவதில்லை என நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கவலை வௌியிட்டனர்.

தேயிலைத் தோட்டங்கள் காடாகியுள்ளமையாலும் சம்பளம் குறைவு என்ற காரணத்தினாலும் மலையகத்தில் பலர் தற்போது மரக்கறி செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை மற்றும் டயகம பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்டவர்கள் மரக்கறி செய்கையை மேற்கொள்கின்றனர்.

தாம் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் செய்கையை மேற்கொள்கின்ற போதிலும், அரசாங்கத்தினால் எவ்வித மானியங்களும் தமக்கு வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், நிர்ணய விலை இல்லாத காரணத்தினால் தமது உற்பத்திகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள தமக்கு மானியங்களை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்